வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (நப்டா) தொடர்பில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி இதுவரையில் தளர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் நப்டா உடன்படிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது.
எனினும், முதலில் வரி விதிப்பு நீக்கப்படும் வரையில் உடன்படிக்கையில் திருத்தங்களை செய்வதற்கு கனடா அவசரம் காண்பிக்காது என வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.
நப்டா உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் ப்ரீலாண்ட் தற்பொழுது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்திகளுக்கான வரி விதிப்பினை கனடாவினால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.