அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின் அந்த அரசிற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனோர் மட்டுமல்லாது பொறுப்புக்கள் உட்பட அனைத்திலும் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லாத இந்த வரவு செலவுத் திட்டத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.