பராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா குழுமம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆலை மூடப்பட்ட பின்னர், சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் நிலத்தடி நீர், காற்றின் தரம் உயர்ந்துள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோவை சேர்க்கக் கூடாது என்று வேதாந்தா குழுமம் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.