எஸ்.என்.சீ லவாலீன் நிறுவன சர்ச்சை தொடர்பிலான எழுத்து மூல ஆவணங்களை முன்னாள் நீதி அமைச்சர் ஜோடி வில்சன் றேய்போல்ட், நாடாளுமன்றின் நீதித் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.
எழுத்து மூலமான அறிக்கைகள், மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட விபரங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் வெள்ளிக்கிழமை மாலை வேளை வரையில் அம்பலப்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் மொழி பெயர்க்கப்பட வேண்டும் எனவும், மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட சில விடயங்கள் நீக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
லவாலீன் நிறுவனம் கையூட்டல் வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மூடி மறைக்குமாறு தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக முன்னாள் நீதி அமைச்சர் றேய்போல்ட் குற்றம் சுமத்தியிருந்தார்.
தமது தரப்பு வாதத்தை உறுதி செய்யும் நோக்கில் சில ஆதாரங்களையும் சாட்சியங்களையும் தாம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக றேய்போல்ட் தெரிவித்துள்ளார்