வெள்ளையின மேலாதிக்கத்துவம் மற்றும் பிரிவினைவாதத்தை தடை செய்யப் போவதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
வெள்ளையின தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை போற்றுதல், ஆதரித்தல், பிரதிநிதி;த்துவம் செய்தல் போன்றவற்றுக்கு எதிராக தடை விதிக்கப்படும் என முகநூல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடும்போக்குவாதத்தை கட்டுப்படுத்தக்கூடிய திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அண்மையில் நியூசிலாந்தில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்கள் முகநூலில் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான இனக் குரோத மதக் குரோத பிரிவிணைவாத மற்றும் வெள்ளை மேலாதிக்கத்துவ கொள்கைகள் பரப்புவதற்கு முகநூலை களமாக பயன்படுத்திக் கொள்ள இனி இடமளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.