எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் கனேடியர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடாவை விட்டு ஐந்து ஆண்டுகள் வெளியே வாழ்ந்து வரும் கனேடிய பிரஜைகள் தேர்தல்களில் வாக்களி முடியாது என 1993ம் ஆண்டில் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தை இரத்து செய்து வாக்களிப்பதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டுமென புலம்பெயர் கனேடியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 2018ம் ஆண்டில் தற்போதைய லிபரல் அரசாங்கம் புலம்பெயர் கனேடியர்கள் உள்நாட்டு தேர்தல்களில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன்படி, வழமைக்கு மாறாக இம்முறை பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் கனேடியர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டில் 11000 புலம்பெயர் கனேடியர்கள் வாக்களித்தனர் எனவும், இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் 30000மாக உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
\