இந்தியாவிற்கு அஞ்சியா இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது? என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தம் இல்லாத நிலையில் எதற்கு பாதுகாப்பு அமைச்சிற்கு மேலதிக நிதி எனவும் அவர் இதன்போது நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.