எஸ்.என்.சீ லவாலீன் விவகாரத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதனை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டு என புதிய சட்ட மா அதிபர் டேவிட் லமேட்டி தெரிவித்துள்ளார்.
லவாலீன் நிறுவனத்திற்கு எதிரான குற்றவியல் விசாரணைகளின் போது எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அதனை எதிர்நோக்க தயார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லவாலீன் விவகாரம் காரணமாக லிபரல் கட்சியின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதுடன் அவர்கள் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
குபெக்கில் உள்ள லவாலீன் நிறுவனத்துடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது எனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்ட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரோ வேறும் நபர்களோ தமக்கு லவாலீன் விவகாரத்தில் எவ்வித தலையீடுகளும் செய்யவில்லை எனவும், அவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் புதிய சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.