செயற்கை நுண்ணறிவு சார் ஒழுக்க விதிகளை கண்காணிக்கும் நோக்கில் கூகுள் நீறுவனத்தினால் நிறுவப்பட்ட பேரவை கலைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏனைய நவீன தொழில்நுட்பங்களின் ஒழுக்க விதி மீறல்கள், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து கண்டறியும் நோக்கில் கூகுள் நிறுவனம் கடந்த வாரம் ஓர் பேரவையை நிறுவியிருந்தது.
எனினும், இந்தப் பேரவையில் அங்கம் வகிக்கும் இரண்டு நபர்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைகைள அடுத்து பேரவையை கூகுள் நிறுவனம் கலைத்துள்ளது.
முக அடையாள தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்ழநுட்பங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கிலேயே இந்த பேரவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் பேரவையில் மொத்தமாக எட்டு உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.