எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் ஏற்படக் கூடும் என்று வெளிவிவகார அசைம்சர் கிறிஸ்டியா ஃப்றீலான்ட் தெரிவித்துள்ளார்.
தலையீடு செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் மிகத் துல்லியமாக காணப்படுகின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஸ்யா போன்ற நாடுகளினால் கனேடிய தேர்தலில் தலையீடு செய்யப்படுவதனை தடுத்து நிறுத்துவதற்கு உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறு சில வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.