இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஸபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் கேர்த்தபாய ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் தள்ளும் எந்த சூழ்ச்சியையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச தலைவர் தேர்தலில் கோதபாய களமிறங்கினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்ட அவர். அதுவும் அமெரிக்கப் பிரஜை ஒருவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும். ஆகவே இது குறித்து இலங்கை எந்த விதத்திலும் தொடர்புபடப்போவதில்லை என்றும் கூறினார்.
மேலும். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் இலங்கையில் அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.