தனிப்பட்ட பயணமொன்றினை முன்னெடுத்து அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நாளை நாடு திரும்பவுள்ளார்.
நாளை காலை 8.15 அளிவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இரண்டு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர் இவ்வாறு நாளை நாடு திரும்ப உள்ளார்.
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவது, அதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பிலும் கோதபாய ராஜபக்ச தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.