கனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம் வழங்கவேண்டுமெனப் பெருமளவு விஞ்ஞானிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், மாணவர்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இது குறித்து கனேடியர்களுக்கான பகிரங்கக் கோரிக்கை ஒன்றைச் சுமார் 100 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்கள்.
தற்போதைய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காலநிலை மாற்றம் விளங்குகிறதென்று குறிப்பிட்டுள்ள அவர்கள், அதன் பாதிப்புக்கள் எவ்வாறானதாக இருக்குமென அறிந்து கொள்ளுமாறும், இந்த விடயத்தில் ஒவ்வொரு கட்சியும் என்ன தீர்வுகளை முன்வைக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
—