தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்தையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களையும் ஒப்பிடுவது தவறானது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த இரு போராட்டங்களுக்குமிடையில் பாரியளவில் வேறுபாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எவ்வித அடிப்படைக் குறிக்கோள்களும் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தொடர்புப்படுத்துவதை, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.