முகநூல் நிறுவனத்திற்கு எதிராக அயர்லாந்தின் தகவல் கட்டுப்பாட்டு ஆணையாளர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
முகநூல் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயனர்களின் பயனர் கடவுச் சொற்களை உள்ளக சேர்வர்களில் பிளெய்ன் டெக்ஸ் வடிவில் சேமித்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வாசிக்கக்கூடிய வகையில் இந்த கடவுச்சொற்கள் தென்படும் என கூறப்பட்டதனைத் தொடர்ந்து அதில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இவ்வாறு பணியாளர்கள் கடவுச் சொற்களை வாசிக்கக்கூடிய வகையில் காணப்படுவது தகவல் சட்டத்தை மீறும் வகையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.