இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி காணொளியை வெளியிட்டுள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக வீடியோ ஒன்றினை வெளியிட்டு இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இறுதி கோட்டையாக இருந்த பாகுஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட இழப்புக்கு பழிவாங்கலாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் இந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் எதிராளிகளை அழிப்பது குறித்து சிலருடன் கலந்துரையாடும் அபூபக்கர் அல் பக்டாடி, எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.