சுற்றுச்சுழல் மதிப்பீடு குறித்த மத்திய அரசாங்கத்தின் சட்டம் அரசியல் அமைப்பினை மீறும் வகையிலானது என அல்பேர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
தேசிய சக்தி வளச் சபை மற்றும் பூர்வகுடியின சமூகம் என்பனவற்றின் பங்களிப்புடன் திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.
புதிய சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் இந்த இரண்டு தரப்பினையும் தவிர்க்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணத்தின் பொருளாதார நிலைமைகளை உதாசீனம் செய்யும் வகையிலேயே மத்திய அரசாங்கம் சட்டத்தை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தை மத்திய அரசாங்கம் நிறைவேற்றினால் அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.