மியன்மார் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் றக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மியன்மாரின் இராணுவம் மற்றும் காவல்துறையினர் கூட்டாக இணைந்து றக்கைனில் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது சுமார் 275 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்ச் சேத விபரங்கள் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன் எச்சரிக்கையாக வானை நோக்கி சுட்டதாகவும், தொடர்ந்தும் எச்சரிக்கையை மீறி குழுமியிருந்த காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.