பிரிட்டிஷ் கொலம்பியாவின் நனைமோ லேடிசிமித் (Nanaimo-Ladysmith) நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Paul Manly வெற்றி பெற்றுள்ளார்.
நல்ல கொள்கைகளின் அடிப்படையில் செய்த பிரச்சாரங்களினால் இந்த தேர்தல் வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது என்று Manly தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் வெற்றியுடன் பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Manly இதே தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய கருத்துக் கணிப்புகளின் பிரகாரம், நாடாளாவிய ரீதியில் பசுமைக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.