அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழர்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் மற்றும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் குறித்த விடயத்தில் அரசாங்கம் எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியளித்ததன் பிரகாரம் அரசியல் தீர்வும் அதனுடன் கூடிய அபிவிருத்தியும் சமநிலையில் பயணிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது, ஆனால் வெறுமனே அபிவிருத்தியைக் காட்டி எமது மக்களின் நீண்டகால அரசியல் தீர்வைப் பின்தள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.