பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் வெலிசறையில் உள்ள இலங்கைக் கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்படுவார்களென இலங்கை அரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் பல பகுதிகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒரு இடத்தில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் 90 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படலாம். அத்துடன், அதன் பின்னர் அவர்களது தடுப்புக் காவல் 90 நாட்கள் வீதம் நீடிக்கப்படவும் முடியும்.