கனடா, மெக்ஸிக்கோவுடன் இந்த கோடை காலத்தில் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அந்நாட்டின் துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ் (தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இந்த உடன்படிக்கையில் திருத்தங்களை செய்து துரித கதியில் கைச்சாத்திட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு தாம் அழுத்தம் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவும், மெக்ஸிக்கோவும் இந்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான ஆயத்த நிலையில் இருப்பதாகவே தென்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படி;ககை அல்லது நப்டா உடன்படிக்கைக்கு பதிலீடாக கடந்த ஆண்டு இறுதியில் மூன்று நாடுகளும் செய்து கொண்ட புதிய உடன்படிக்கையில் இதுவரையில் திருத்தங்கள் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.