கன்ர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ட்றூ ஷ_யர், இனவாத செயற்பாடுகள் குறித்து மெத்தனப் போக்கினை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றின் நீதிக் குழுவில் இணையத்தில் குரோத உணர்வுத் தூண்டுதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கல் கூப்பர் இனக்குரோத அடிப்படையில் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழுவின் எதிரில் சாட்சியமளித்த முஸ்லிம் ஒருவருடன் கூப்பர் முரண்பட்டுக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஷ_யர், மைக்கல் கூப்பரை நீதிக் குழுவிலிருந்து நீக்கியிருந்தார்.
எனினும், இவ்வாறு இனக்குரோத அடிப்படையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் கூப்பருக்கு இதனை விடவும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், இந்த விவகாரங்களில் ஷ_யர் அசமந்தப் போக்கை பின்பற்றி வருவதாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மைக்கல் கூப்பரை கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.