கனடாவிற்கான பயணத் தடையை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நீக்கிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கழிவுப் பொருட்கள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவினால் அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகை கழிவுகளை மீளப் பெற்றுக்கொள்ளத் தவறியமைக்காக பிலிப்பைன்ஸ் கடுமையான அணுகுமுறைகளை பின்பற்றியிருந்தது.
கழிவுகளை கனடா மீளப் பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் பயணத்தடைகளை விதித்ததுடன், அந்நாட்டின் கனடாவிற்கான தூதுவரும் மீள அழைக்கப்பட்டிருந்தார்.
கனடாவிற்கான பயணங்கள் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்து விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக பிலிப்பைன் அரசு தலைவர் ரொட்றிகோ டுரேட்டோவின் (சுழனசபைழ னுரவநசவந ) நிறைவேற்றுச் செயலாளர் ளுயடஎயனழச ஆநனயைடனநய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பயணத் தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.