பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வெலிக்கடை பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கலகொட அததே ஞான சார தேரருக்கு வெளிநாடு செல்ல தடைவித்தக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் காஞ்சனா டி சில்வா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.