வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் இன்று பல அரச சலுகைகள் வழங்க்படுகின்றது என லிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி லீலாதேவி தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.