வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று (19.06.2019) வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளிற்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் மக்கள் சந்திப்பில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாகாண ஆளுனரை சந்தித்து தமது பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.