ஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் ணூயபெ துரn இது பற்றி அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதி ஜப்பானின் ழுளயமய நகரில் உள்ள வுhந ஐவெநசயெவழையெட நுஒhiடிவைழைn ஊநவெநச இல் நடைபெறும் ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு சீனா இடமளிக்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹொங்கொங்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சீனாவிற்கு நாடு கடத்தி விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து முன்வைக்கப்பட்ட சட்டத்திற்கு எதிராக ஹொங்கொங் மக்கள் பாரியளவில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த உத்தேச சட்டத்தை அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்டிருந்தது.
ஜீ20 மாநாட்டில் அமெரிக்க அரசு தலைவர் டொனால்ட் ட்றம்ப் மற்றும் சீன அரச தலைவர் ஸீ ஜின்பிங் ஆகியோர் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவார்களா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கான சாத்தியம் கிடையாது என்று சீன துணை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.