ஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே கூறுகிறார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேநேரம் சஜித் பிரேமதாச மிகவும் திறமை மிக்க ஒருவர் என்றும் அவர் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் என்றும் அமைச்சர் தயா கமகே கூறுகிறார்.