திருகோமலையில், கன்னியா வென்னீரூற்றப் பிள்ளையார் கோவிலைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நடத்தபடவிருந்த பொதுமக்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடையை காவல்துறையினர் நீதிமன்றில் பெற்றுள்ளனர்.
பிள்ளையார் கோவிலுக்குத் தவத்திரு அடிகளார் தலைமையில் பொதுமக்கள் சென்றபோது கன்னியா வென்னீரூற்று வீதியில் தடுக்கப்பட்டுள்ளனர்.போராட்டம் மற்றம் வழிபாட்டுக்குத் தடை உத்தரவு பிறப்பித்த பத்திரத்தைக் காண்பித்து பொதுமக்களை தடுத்துள்ளனர் காவல்துறையினர்.
இதநேரம் போராட்டத்தை தடுப்படுதற்கு முன்னேற்பாடாக இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
தடை உத்தரவால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிகளில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.கன்னியா வென்னீரூற்று பகுதியில் உள்ளிட்ட தமிழர் தம் பூர்வீக மண்ணிற்கு செல்லவிடாது தமிழ் மக்கள் இன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே அங்கு பிள்ளையார் ஆலயத்தின் காணி உரிமையாளரான வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது பிக்கு ஒருவர் தேனீர் மற்றும் கழிவுகளை வீசியமை பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
இதனையடுத்து பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் காவல்துறை வீதித்தடையினையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கன்னியா நில ஆக்கிரமிப்பு தொடர்பில் ஆராய பொது அமைப்புக்கள் இன்று காலை கன்னியாவில் சந்திப்பொன்றிற்கு அழைப்புவிடுத்திருந்தன.
எனினும் அங்கு சென்றவர்களை உள்ளே செல்லவிடாது காவல்துறை தடுத்துள்ளது.
இந்நிலையிலேயே தற்போது மக்கள் வீதி தடை முன்னர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மறுபுறம் ஆலய வளிவினுள் காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பிள்ளையார் ஆலயத்தின் காணி உரிமையாளரான வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது பிக்கு ஒருவர் தேனீர் மற்றும் கழிவுகளை வீசியமை பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.