ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகியதையடுத்து
புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் போட்டியிட்டனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்த இந்த தேர்தலில் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.