நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெறாவிட்டால், ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், அதற்காக இரண்டு மாதகால அவகாசம் அவசியம் என ஏற்கனவே அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவு அவசியமானது என்றும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெறாவிட்டால், ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தாக்கம் செலுத்துவதனால், மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடமே நடத்த வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக செப்டம்பர் 20ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.