கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதாகும். அதற்கான முயற்சிகள் மந்தகதியிலேயே நகருகின்றன. ஆகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது. – இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.