பள்ளிக்கூடம் ஆரம்பமாவதற்கு முன்பாகவும், முடிவடைந்த பின்பாகவும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் தலைவரான பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வோட்டர்லூவில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு வருடமொன்றுக்கு 535 மில்லியன் டொலர் செலவாகும்.