கனேடிய அரசாங்கம் சுமார் 30 மில்லியன் டொலர் பெறுமதியான ஈரானிய சொத்துக்களை முடக்கியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
முடக்கப்பட்ட சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு அந்தப் பணம் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டு நட்டஈடு கோரிய அமெரிக்க குடும்பங்களுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் அமைந்துள்ள ஈரானிய கலாச்சார மண்டபங்கள் மற்றும் ஈரானிய வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணம் இவ்வாறு வழங்கப்பட உள்ளது.
2012ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கும் சட்டத்தின் அடிப்படையில் இந்த நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.