அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு 5 பேர் கொண்ட பட்டியலை அதிபர் டொனால்ட் டிரம்ப் தயார் செய்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த ஜான் போல்டன் கடந்த செப்டம்பர் 11ந்தேதி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்பொழுது, தனது பல ஆலோசனைகளுக்கு போல்டன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், அரசு நிர்வாகத்துடன் அவரது செயல்பாடுகள் ஒத்து போகவில்லை என்று குற்றச்சாட்டாக கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு 5 பேர் கொண்ட பட்டியலை அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி செய்துள்ளார்.
ராபர்ட் ஓ பிரையன், ரிக் வாடெல், லிசா கார்டன்-ஹேகர்டி, பிரெட் பிளீட்ஜ் மற்றும் கெய்த் கெல்லாக் ஆகிய 5 பேர் கொண்ட பட்டியலை அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை இது முழுமையான பட்டியல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.