அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் இடைக்காலச் செயலாளர் கெவின் மக்அலீனன் (Kevin McAleenan)
பதவியேற்ற ஆறு மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பிய மக்அலீனன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இடத்திற்கு புதியவர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் எனவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
48 வயதான மக்அலீனன் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, நியமிக்கப்பட்ட நான்காவது உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆவார்.
குடியேற்றவாசிகள் தொடர்பான கருத்து முரண்பாடுகள் காரணமாகவே இவர் பதவியை ராஜினாமா செய்ததாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.