மக்கள் தி.மு.கவிற்கு தரவுள்ள வெற்றியை பெற்றுகொள்ள ஆட்சியாளர்கள் சாம, பேத, தான, தண்டம் என அனைத்து தந்திர வழிகளையும் கையாள்வார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் குறித்து இன்று ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்திலே, ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் மக்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். அதிகார அத்துமீறல்களில் ஈடுபடுவார்கள். கொள்ளையடித்துக் குவித்து வைத்திருக்கும் பணத்தால் வெற்றியை விலைபேசி வாங்கிடலாம் என நினைப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்குநேரி – விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.