புதிய ஜனநாயக முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன விடயத்தை கண்டு அவர்களுக்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கியுள்ளதென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பினார். காலத்திற்கு காலம் நாம் ஆட்சி மாற்றத்தை செய்யவில்லை என்றும் ஆட்சியை மாற்றியதாக எண்ணிக்கொண்டு ஆட்களைதான் மாற்றியுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.





