அமெரிக்காவின் உடன்பாடு சிறீலங்காவை முற்றாக ஆக்கிரமிக்கும் செயல் இது ஒரு புற்றுநோய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் பெரும்பான்மைச் சிங்கள மக்களும், அவர்களின் பொது அமைப்புக்களும், பௌத்த துறவிகளும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பு இன்று (6) போராட்டத்தை மேற்கொண்டுள்னர்.
சிறீலங்கா அரசு இந்த உடன்பாட்டில் கையொப்பமிடக்கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவின் உடன்பாட்டுக்கு எதிராக உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்ட உடுடும்பர தேரர் அரச தலைவர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் உறுதிமொழியைத் தொடர்ந்து தனது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் தேர்தல் முடியும் வரை உடன்பாடு கைச்சாத்திடப்படாது என சஜித் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.