புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றார். அவர் சந்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு ஆரம்பம்!
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
கடமைகளை பொறுப்பேற்கிறார் புதிய ஜனாதிபதி கோட்டாபய!
இலங்கையின் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கமைய இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
மேலும் புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரை நியமிக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவர் என கருதப்படும் இறுதிக் கட்ட யுத்ததின்போது முக்கிய பங்கு வகித்த ஒருவரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் நேற்று காலை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன மற்றும் பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.