சிறிலங்கா சனாதிபதியாக வெற்றிபெற்றபின் கோத்தமாய ராசபக்ச முதல் அரசுமுறைப் பயணமாக இந்திய சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழினப்படுகொலையின் முக்கிய கொலையாளி என உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்திய தலைநகர் புதுதில்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தலமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இதில் அக்கட்சியின் மற்றொரு எம்பியான கணேசமூர்த்தியும் மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் தமிழுணர்வாளர்கள் கலந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அனைவரும் தில்லி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.