கோத்தபாயாவின் இந்திய வரவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் 10 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

போராட்டத்தில் நூற்றுக்கணக்கான உணர்வாளர்கள் பங்கேற்று இலங்கை ஜனாதிபதி கோட்டபாயாவின் இந்திய பயணத்தை கண்டித்தும் ,இந்திய மத்திய அரசு உடனே கோட்டபாயாவை திருப்ப அனுப்பவேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு தூதரகத்திற்குள் நுளைய முற்பட்டனர் இவர்கள் அனைவரையும் தமிழ காவல்துறையினர் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.சி.எஸ் திருமண மண்டபத்திலே அடைத்துள்ளதாக தமிழக செய்திகள் தெருவிக்கின்றன.