தாய்ப்பாலின் மகிமை
பத்து மாதம் தாயின் கருவறையில் இருந்து பிறந்த குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் இயற்கையாகவே அமைந்துள்ளன. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் தாய்ப்பால் குழந்தைகளுக்கு இருதய பிரச்னையை தடுக்கிறது என ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு மற்றும் டொரண்டே பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.