வியாழேந்திரன் எம்பி உட்பட பத்து பேருக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் மேற்படி நபர்கள் வகித்துவந்த பதவிகளை வறிதாக்கி புதிய நபர்களை நியமிக்க தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்கள் வருமாறு,
– எம்பி – வியாழேந்திரன் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி).
– நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் – பிலிப் பற்றிக்ரோசன் (தமிழீழ விடுதலை இயக்கம்).
– மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் – இரா.அசோக்.
– மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் – யூசைமுத்து பிலிப்.
– பிரதேச சபை உறுப்பினர் – தோமஸ் சுரேந்தர் ( மண்முனைப் பற்று பிரதேச சபை)
– ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் – வ.சந்திரவர்ணன்.
– ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் – சி.சிவானந்தன்.
– கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினர் – பா.முரளிதரன்.
– பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் – க.கோணேஸ்வரநாதன்.
– உறுப்பினர் – குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – அம்பாறை).