ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவருமான அருளர் என்றழைக்கப்படும் அருட்பிரகாசம்; மறைந்து விட்டார்.போராட்ட ஆரம்ப காலத்தில் அவர் “லங்கா ராணி” என்ற புதத்தகத்தை எழுதியிருந்தார்.
ஈழப்போராட்ட வரலாற்றோடு இணைந்திருந்த“கன்னாட்டி” பண்ணைக்குரியவர். 1980 களில் ஈழப்போராட்ட இயக்கங்களுக்கிடையில் பரஸ்பர உறவைக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்.
லண்டன், இந்தியா, இலங்கை என எப்போதும் பயணங்களை மேற்கொண்டு அரசியல், சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர்.தனது மரணம் வரை தமிழீழ கனவை கொண்டிருந்தவர்.
இறுதி காலங்களில் ஈரோஸ் அமைப்பு பல துண்டுகளாக பிளவுண்டு போயிருந்தமை பற்றி அவர் கவலை கொண்டிருந்தார்.
பிரபல பாடகி மாயாவின் தந்தையாரே அருளர் என்பது குறிப்பிடத்தக்கது.