பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பித்து, கூடவே திருக்குறளையும் கற்பித்தால் போதுமானது. பிரபாகரனின் வாழ்க்கை என்பது திருக்குறள் கூறுவதிலிருந்து பெரிய வேறுபாடு இல்லை என்றுதான் கூறவேண்டும்.
சிலர் பெரியாரைப் பிடிக்கும், ஆனால் பிரபாகரனைப் பிடிக்காது என்பர். ஆனால் உண்மை என்னவென்றால் பிரபாகரனுக்குள் பெரியார் அடக்கம்.
பிரபாகரனின் தத்துவங்கள் இன விடுதலை[4], தனிமனித ஒழுக்கம், பண்பாடு [ 8], போரியல் மற்றும் உத்திகள் [5, 6,7,9,10], உலக அரசியல்[4], தலைமைத்துவம் [11] என்று சமூகம் சார்ந்த அனைத்து பரிணாமங்களைக் கொண்டுள்ளது.
பிரபாகரன் என்ற பாத்திரம் மிகப் பெரியது; அதை திருக்குறளைக் கொண்டோ அல்லது பெரியாரைக் கொண்டோ நிரப்பிவிட முடியாது.
பிரபாகரனின் தத்துவங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவை உலகம் அனைத்தும் காணும்படி செயல்முறைப் படுத்தப்பட்டு உலகம் வியக்கும் வெற்றிகளை அடையக் காரணமாக அமைந்தது. நாம் அவற்றை நம்பி பயன்படுத்தலாம். ஆனால் இந்த சிறப்பு நூல்களில் உள்ள தத்துவங்களுக்குக் கிடையாது.
ஈழப்போர் என்பது தமிழர் வரலாற்றின் மாபெரும் பரிணாமம். அது தனக்கு முந்தைய மற்றும் பண்டைய வரலாற்று, பண்பாட்டு, அறிவுக் கூறுகளை உள்வாங்கியது மட்டுமில்லாமல் புதுமையைப் படைத்தது.
ஈழப்போரின் விளைவாக தமிழ்த்தேசியம் பாரிய முன்னேற்றங்களை இன விடுதலை, பண்பாடு, வாழ்க்கைத் தத்துவம், போரியல் உத்திகள், தலைமைத்துவம், உலக அரசியல், சமூகம் என பல துறைகளில் கண்டுள்ளது.
நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ, அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரனும் மாவீரர்களும் கட்டிவிட்டனர்[12]. இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை.
அதை செய்து முடிக்க வேண்டுமானால், அர்த்தமுள்ள வாழ்க்கையை நாம் வாழ நினைத்தால் மட்டுமே முடியும்