இலங்கை சுகாதார துறையினருக்கு உலக சுகாதார அமைப்பான WHO அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
WHO வின் தென்கிழக்காசியாவுக்கான பிராந்தியப் பணிப்பாளர் வைத்தியர் Poonam Khetrapal Singh இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார்.
எயிட்ஸ் நோய்க்குக் காரணமான HIV வைரஸ் ஆனது, தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவது இலங்கையில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எயிட்ஸ் மட்டுமன்றி, பிறப்பிலிருந்து ஏற்படும் பால்வினை நோயான சிஃபிலிஸ் இற்கான வாய்ப்பும், இலங்கையில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, இலங்கையில், தாயிடமிருந்து குழந்தைக்கு HIV வைரஸ் பரவுவது குறித்த எந்தச் சம்பவமும் பதிவாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.