குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஸ்பெய்ன் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
4 முதல் 7 வயது வரையிலான ஆயிரத்து 480 சிறுவர்களின் வாழ்க்கைமுறையின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
உடல் உழைப்பு, உறங்கும் நேரம், தொலைக்காட்சி முன் செலவிடும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவர்களின் எடை, உயரம், இரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் இதன்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் குறைந்த அளவே இயங்கி அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.