சர்வதேச மத செயற்பாடுகள் பற்றிய சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக வல்பொல பியநந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா அபேரத்னே புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ராஜபக்ஷ முன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(16) பதவியேற்றமையும் குறிப்பிடத்தக்கது.